தமிழ்த்தட்டச்சுப் பயிற்சியின் போது, மாணவர்கள் ஆசிரியர் கூறும் விளக்கங்களைக் கேட்டு,அதன்படி தங்கள் பயிற்சியினைச் செய்யத் தயாராகின்றனர்.
குழுவாக நின்று ஆசிரியர் கூறுவதை ஆர்வத்துடன்,கண்ணுங்கருத்துமாகக் கற்றுக் கொள்ளும் நம் மாணவர்கள்.
சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டதால் மாணவர்கள் நாங்கள் எதிர்பார்த்த தமிழ்த்தட்டச்சு முதல் மின்னஞ்சல் அனுப்புவது வரை அனைத்துத் திறன்களையும் விரைவாகக் கற்றுக் கொண்டது மகிழ்ச்சியான ஒன்று.
இரண்டு நாள் பயிற்சியின் முடிவில், தமிழ்த்தட்டச்சு செய்ய தெரிந்து கொண்ட மகிழ்ச்சியோடு சான்றிதழ்களுடன் நிற்கும் நம் மாணவர்கள்.
0 comments:
Post a Comment