மாணவர்கள் அங் மோ கியோ கடைத்தொகுதிக்கு மேற்கொண்ட ஒரு கற்றல் பயணத்தின் மூலம் பல பயன்களைப் பெற்றனர். ‘நியூஸ் மேக்கர்’ என்னும் மென்பொருளைப் பயன்படுத்தித் தங்கள் அனுபவங்களைச் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அத்துடன் தாங்கள் சேகரித்த சொற்களைக் கொண்டு ஆங்கில-தமிழ் மின்னகராதி ஒன்றையும் தயாரித்துள்ளனர். பேச்சுத்தமிழின் பயன்பாட்டுக்கு வழிவகுக்கவும் சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் இக்கற்றல் பயணம் உதவியது.
கதை சொல்லும் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும் பயிலரங்கில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.‘ஒலி 96.8’ன் படைப்பாளர் திருமதி பாமாவும் பெரியோர்க்கான கதை சொல்லும் போட்டியில் முதல் பரிசு பெற்ற திரு ரஜித்தும். தங்கள் திறன்களை வஞ்சகமின்றிப் பகிர்ந்து கொண்டனர்.
N7 வடக்கு வட்டாரக் குழும உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற பாட்டுப்போட்டியில் நம் பள்ளி மாணவி அனுஷியா மூன்றாம் பரிசை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். நம் தலைமையாசிரியரிடமிருந்து பரிசுக்கோப்பையைப் பெற்றார். வாழ்த்துக்கள்,அனுஷியா!
0 comments:
Post a Comment